January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபயவின் விசேட அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் இன்னும் சில தினங்களுக்குள் தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் எதிர்க்கட்சியினர் மக்களை திசை திருப்பி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்கள் மிகவும் கவலைக்குரியது என்பதுடன், அவை நாட்டை மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லக் கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி இன்று மாலை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே இவ்வாறு கூறியுள்ளார்.

நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நிலைமையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், அந்த வகையில் பல்வேறு நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாக ஜனாதிபதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து அதன் உதவிகள் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், உரம், எரிவாயு மற்றும் எரிபொருள் என்பன எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.