January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களின் பேரணி மீது தாக்குதல்: கொழும்பில் பதற்றம்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தப்பட்டள்ளது.

நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருந்தனர்.

இவர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் உலக வர்த்தக மைய கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடையை உடைத்துக்கொண்டு முன்னால் செல்ல முன்னால் செல்ல முயன்ற போது அவர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.