January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டொலரில் செலுத்தினால் எரிபொருள் கிடைக்கும்!

அத்தியாவசிய தேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் டொலரை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளக் கூடிய முறைமையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி அவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.