எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ள நிலையில், ஜுலை 8 ஆம் திகதி முதல் இ.போ.ச பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பணிகளுக்கு செல்வதற்காக தமக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக இ.போ.ச மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் பொதுப் போக்குவரத்துத்துறை எதிர்வரும் நாட்களில் முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.