இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் நாட்டின் பணவீக்கம் மேலும் பெருமளவில் உயரலாம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது பணவீக்கம் 50 வீதமாக காணப்படும் நிலையில் அது எதிர்வரும் மாதங்களில் 70 வீதம் வரையில் உயரலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பணவீக்கம் பெருமளவில் குறைவடைய வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்காக அந்நிய செலாவணியை வலுப்படுத்துவற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கி ஆளுநர் இதனை கூறியுள்ளார்.