January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்கள் காரணமாக கொழும்பில் முக்கிய இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரிமாளிகை, பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

9 ஆம் திகதி காலிமுகத்திடலில் பெருந்திரளானவர்கள் கூடி போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக இன்றைய தினத்தில் கொழும்பில் பிக்குகள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.

அதேபோன்று நாளைய தினத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியம் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.