கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களுக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தோர் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இன்றைய தினத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அங்குள்ள விகாரைக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து தொடர்ச்சியாக தங்குவதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் கூடும் என தெரிவித்து அதனை தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு கொழும்பு நீதவான் நீதிமன்றம், குறித்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதித்தள்ளது.
இதன்படி குறித்த பகுதிகளுக்குள் பிரவேசித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதற்கு இவர்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.