சர்வகட்சி அரசாங்கதத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையே முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி , தேசிய சுதந்திர முன்னணி தலைமையிலான 9 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
இதன்படி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சட்டப்பூர்வமான சர்வகட்சி அரசாங்கமொன்றை விரைவில் ஸ்தாபிக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சியின் அனைத்து தலைவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அரசியல் குழுவொன்றையும் பொருளாதார குழுவொன்றையும் நியமிப்பதற்கும் இங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.