கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் தீடீரென நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறாக நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.