February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
விசாரணைகள் முடியும் வரை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.