
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அங்கு ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை நோக்கி நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவி வருகின்றது.
பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலால் அந்தப் பகுதியில் வீதியில் செல்லும் வாகனங்களில் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.