February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிருணிகா உள்ளிட்ட பலர் கைது!

File Photo

கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கிருந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அந்தப் பகுதியில் தற்போது பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.