February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரணில் பதவி விலக வேண்டும்”: அமைச்சர் தம்மிக பெரேரா கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

டொலரை நாட்டுக்கு கொண்டு வரக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருக்கின்ற போதும், நிதி அமைச்சர் அதனை செய்யாது இருப்பதாக தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் தானும் போராட்டத்துடன் இணைந்துகொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இனினும் தன்னால் நாட்டை அனர்த்தத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என்றும், நிதி அமைச்சரின் பொருளாதார ஆலோசகர்களை விவாதத்திற்கு அழைப்பதாகவும் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தி அவர் இதனை கூறியுள்ளார்.