முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலகி வீட்டுக்கு போகும் வரையில் அந்த இடத்தைவிட்டு போக மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.