இலங்கையில் மீண்டும் கொவிட் வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அந்தப் பிறழ்வுகள் இலங்கையிலும் பரவலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கொவிட் தடுப்பூசியின் நான்காவது ஊசியையும் போட்டுக்கொள்வது அவசியமாகும் என்று சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்று முழுவதுமாக கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.
தற்போது இலங்கையினுள் 20 வயதுக்கும் மேற்பட்ட 97 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியையும், 7.9 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.