லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கப்பல் ஜுலை 9 ஆம் திகதியே இலங்கையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3,724 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஜுலை 6 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடல்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால், கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.
நாட்டில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வீடுகளுக்கான லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.