குருநாகல் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரி அனைத்து பணிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
அண்மையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரியொருவர் அங்கு நபர் ஒருவர் மீது காலால் எட்டி உதைக்கும் வீடியோவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தி வரும் இராணுவ தலைமையகம், சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரியை அனைத்து பணிகளில் இருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.