File Photo
நெருக்கடி நிலைமை தொடருமாக இருந்தால் இந்தியாவுடன் இலங்கையை இணைத்துவிடுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமையில் புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும், இதற்காக நாட்டில் இனவாதத்தை ஒழிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் அதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடருமாக இருந்தால் இந்தியா தலையிடும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சனைகள் அவ்வாறு தொடருமென்றால் இந்தியாவுடன் இலங்கையை இணைத்தால் அவற்றுக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.