January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபையில் ரணில் – சஜித் கடும் வாக்குவாதம்!

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் தெளிவுப்படுத்தி சபையில் உரையாற்றிய நிலையில், அதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் வேலைகளை செய்ய முடியாத பிரதமரே ரணில் விக்கிரமசிங்க என்று குறிப்பிட்டார்.

அத்துடன், மாற்று அரசாங்கமான எதிர்க்கட்சிக்கு ஆட்சியை ஒப்படைக்குமாறு கோருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் பதிலளிக்கும் போது, எதிர்க்கட்சியினரிடம் முறையான வேலைத்திட்டங்கள் இல்லையென்றும், இருந்தால் முன்வைக்குமாறு கேட்பதாக கூறினார். அத்துடன் தன்னிடம் படித்தவர்களுக்கு ஆட்சியை எப்படிப் பிடிப்பது என்றும் தெரியவில்லை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவிடம் நாங்கள் படிக்கவில்லை என்றும், எனது தந்தையே அவருக்கு அரசியல் கற்பித்துள்ளார் என்றும் கூறியதுடன், நாங்கள் எப்படி அரசியல் படித்து அவரை பூச்சியத்திற்கு கொண்டு வந்தோம் என்றும் தெரிவித்தார்.