ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் பிரதமர் பதவியையும் அரசாங்கத்தையும் ஒப்படைக்க தான் தயாராகவே இருக்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பிரதமர் இதனை கூறியுள்ளார்.
அனுரகுமார 6 மாதங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமென்றும், அது தொடர்பான வேலைத்திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அப்படி செய்தால் அவருக்கு நோபல் பரிசை வழங்கவும் முடியும்.
இந்நிலையில் அவர்களிடம் வேலைத்திட்டம் இருந்தால் அதனை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கேட்கின்றோம். அது நல்ல திட்டங்களாக இருந்தால் ஜனாதிபதியுடன் பேசி அனுரகுமாரவுக்காக பிரதமர் பதவியை வழங்க தயாராக இருக்கின்றேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.