
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய நிலையில், 10.05 மணியளவில் ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்துள்ளார்.
இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெளிவுப்படுத்தி உரையாற்றினார்.
இதன்போது திடீரென எதிரணியினர் ‘கோ ஹோம் கோட்டா’ என்று கோசமெழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், பிரதமரின் உரை முடிவடைந்ததும் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.