முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, நாட்டில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பிலும் அதற்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இவர்கள் ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.