
இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை மேலும் ஒருமாதம் தள்ளிப் போகும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி நவம்பர் மாதத்திலேயே பரீட்சை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.