இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைதாகியுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மீனவர்கள் வந்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான மீனவர்கள் படகுடன் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்கள் இன்றைய தினத்தில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.