January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் உள்ளிட்ட சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே இந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இதன்படி மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை நிலையங்களும் வர்த்தமானி ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.