January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இனியும் தாமதிக்க முடியாது”: சஜித் விசேட அறிவித்தல்!

இனியும் தாமதிக்காது பதவி விலகி போய்விடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியாலும், பிரதமராலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், இதனால் அவர்கள் உடனடியாக பதவி விலகுவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னிலையான அரசியல் கட்சிகள் பல தங்களுடன் இணைந்து செயற்பட விரும்பம் தெரிவித்துள்ளதாகவும், இதன்படி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு தலைமைத்துவம் வகிக்க தாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டை மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக மக்களை தங்களுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.