இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் ஜுலை 4 முதல் 8 ஆம் திகதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொழும்பு உள்ளிட்ட நகர பாடசாலைகளுக்கு 10 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மற்றைய கிராமப்புற பாடசாலைகள் நடைபெற்ற நிலையில் அவற்றுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.