January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் கஞ்சனவின் அறிவித்தல்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 8-9 ஆம் திகதிகளுக்கு இடையிலும் மற்றும் 11-14 ஆம் திகதிகளுககு இடையிலும் இரண்டு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 22-23 ஆம் திகதிகளுக்கு இடையில் பெட்ரோல் கப்பல் ஒன்றும் வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று 22-23 ஆம் திகதிகளுக்கு இடையே இன்னுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனம் இறக்குமதி செய்யவுள்ள எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.