January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெருக்கடி தீவிரம்: நாடு முடங்கும் அபாயம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையால் எதிர்வரும் வாரங்களில் நாடு முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேவையான அளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு, நெருக்கடிக்கு தீர்வு காணும் வரையில் முடக்க நிலைமை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக நாடு முடக்கப்படாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி முழுமையாக நாட்டை முடக்கி விடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் கட்டம் கட்டமாக முடங்கி வருகின்றன.

இந்நிலையில் அடுத்த வாரம் முதல் இவை முழுமையாக முடங்கி, நாட்டை முடக்கும் நிலைமை உருவகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மருத்துவ சேவைகளும் தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் இன்றி மருத்துவர்கள், தாதிமார்களுக்கு பணிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அம்பியூலன்ஸ் மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், அவை போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பின்னரே எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன. அதுவரையில் நெருக்கடி நிலைமை நீடிக்கும் என்பதுடன், நாடும் முடங்கும் நிலை ஏற்படும்.