January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நெருக்கடிக்கு 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்”

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, நாட்டில் தற்போது பெரும் பிரச்சனையாக உள்ள எரிபொருள் மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வேளையில் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்வரும் 10 நாட்களுக்கு பொறுமையாக இருக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த எம்.பிக்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.