February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களுக்கு போதுமான எரிபொருள் கிடைக்காமையினால் அவர்கள் பணிகளுக்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மின்சார சபையும் இதேபோன்ற நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுத்துள்ளது. இதனால் திடீர் மின் தடைகள் ஏற்பட்டால் திருத்தப் பணிகளில் தாமதங்கள் ஏற்படலாம் என்று அந்த சபை அறிவித்துள்ளன.