January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் கப்பல்கள் வரும் தினங்கள் அறிவிப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் கப்பல்கள் மூன்று ஜுலை 13 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி அதில் ஒரு கப்பல் ஜுலை 13 – 15 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக் கப்பல் ஜுலை 29 -31 ஆம் திகதிகளுக்கு இடையிலும், அதற்கு அடுத்தக் கப்பல் ஆகஸ்ட் 10 – 15 ஆம் திகதிகளுக்கு இடையிலும் நாட்டை வந்தடையும் என்று ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்யும் எரிபொருள் கப்பல்கள் வரும் தினம் இதுவரையில் சரியான அறிவிக்கப்படவில்லை.