எம்பிலிப்பிட்டியவிலுள்ள சந்திரிகா வாவியில் குதித்த தாயும், பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளுடன் தாயொருவர் வாவியில் குதிப்பதை கண்ட பிரதேசவாசிகள், அவர்களை மீட்டுள்ளனர்.
இதன்போது 5 வயது மகன் உயிரிழந்திருந்துடன் 32 வயது தாயும், 11 வயது மற்றுமொரு மகனும் காப்பாற்றப்பட்டு எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து தாய் சிகிச்சைப் பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வறுமை நிலை காரணமாகவே தாய் பிள்ளைகளுடன் வாவியில் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.