இலங்கைக்கு ஜப்பான் உதவிகளை வழங்குவதற்கு மறுத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்று ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு உதவ முடியாத என்றும், உதவிகள் தவறாக நிர்வகிக்கப்படலாம் என்றும் ஜப்பானிய தூதுவர் கூறியுள்ளதாக தெரிவித்து கொழும்பு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த செய்திகளில் உண்மையில்லை என்று கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து பேணுவதாகவும் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.