எரிபொருள் நெருக்கடி நிலைமையால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடைத்தாள் திருத்தும் பணிகளின் இரண்டாம் கட்டம் கடந்த வாரம் முதல் ஆரம்பமானது.
இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியால் அந்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை இடைநிறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.