எரிபொருள் நெருக்கடி நிலைமையால் ரயில் சேவைகள் பல இரத்தாகியுள்ளன.
கடந்த இரண்டு தினங்களில் இவ்வாறாக 22 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூர இடங்களுக்கான ரயில்களும் மற்றும் அலுவலக ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே திணைக்களத்திடம் போதுமான எரிபொருள் உள்ள போதும், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியால் ரயில்வே ஊழியர்களுக்கு பணிகளுக்கு வருவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் திட்டமிடப்பட்டிருந்த குறித்த ரயில் சேவைகளை முன்னெடுக்க முடியாமல் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் இதே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் பஸ் சேவைகள் பலவும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த தினங்களாக தனியார் பஸ் சேவைகள் முடங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.