கலாநிதி நந்தலால் வீரசிங்க, மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2022 ஜூலை 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.