February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் இன்னுமொரு கப்பல் வந்தது!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால் மேலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் தற்போது கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றில் உள்ள பொருட்கள் இந்தியத் தூதுவரினால் இலங்கைக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் 14,712 டொன் அரிசி, 250 டொன் பால்மா மற்றும் 38 டொன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே தமிழக அரசின் முதல் கட்ட நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.