
அரச ஊழியர்களுக்கு தனியார் துறையிலும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதற்காக அரச ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை இது தொடர்பில் குறித்த குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டதும், அதனை அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 2 வாரங்களில் அது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரச ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.