
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறும் நோக்கில் படகில் பயணித்த 35 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அவுஸ்திரேலியா நோக்கியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறையை அண்மித்த கடற்பரப்பில் ஜுன் 23 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடையே 25 ஆண்களும், 4 பெண்களும், 6 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திருகோணமலை, மன்னார். நீர்கொழும்பு, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.