
ஜுலை மாதமளவில் எரிவாயு கப்பல்கள் இரண்டு இலங்கை வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்களில் 7,000 மெட்ரிக் டொன் எரிவாயு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜுலை 5 மற்றும் 12 ஆம் திகதிகளில் குறித்த கப்பல்கள் இலங்கை வருமென்று எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில வாரங்களாக வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே கடந்த வாரங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.
எனினும் கையிருப்பு தீர்ந்து வருவதால் கடந்த திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எரிவாயு கப்பல்கள் வரும் வரையில் வீட்டுப் பாவனைக்கான எரிவாயு விநியோகம் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.