
இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எரிபொருள் தீர்ந்ததால் ஓடிக்கொண்டிருந்த ரயிலொன்று இடைவழியில் நின்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று மாலை, கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு நின்றுள்ளது.
பேரலந்தை பகுதியில் குறித்த ரயில் நின்ற நிலையில், பயணிகள் அதில் இருந்து இறங்கி வேறு வாகனங்கள் மூலம் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ரயில்வே களஞ்சியத்தில் எரிபொருள் கையிருப்பு வழமையை விடவும் குறைவாகவே காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.