சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படும் 5 சொகுசு கார்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வாகன உதிரி பாகங்களை கொண்டு வரும் போர்வையில், இந்த கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஒருகொடாவத்தையில் உள்ள சுங்க களஞ்சிய பகுதியில் கொள்கலன் பெட்டிகள் சிலவற்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வாகனங்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.