
இலங்கை பெட்ரொலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 74 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 78 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை ஒடோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 56 ரூபாவினாலும், சுபர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 65 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் இதுவரையில் லீட்டர் ஒன்று 87 ரூபாவுக்கு விற்பனையாகிய மண்ணெண்ணெய் விலையை 210 ரூபாவினால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.