January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்”

நெருக்கமான நண்பன் என்ற வகையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு இந்தியா முடிந்தளவுக்கு உதவிகளை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவாகர செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கு மேலும் நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய கடன் உதவியில் இலங்கைக்கு தேவையான எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான நேரத்தில் இவ்வாறாக இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா எப்போதும் வழங்கும் என்று இந்திய வெளியுறவு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.