
இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாத்ரா உள்ளிட்ட உயர்மட்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இன்று முற்பகல் 9.30 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவிவகார செயலாளருடன் மூன்று உயர் அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, இந்தியாவினால் வழங்கக் கூடிய உதவிகளை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.