இலங்கைக்கு இன்று வரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒருநாள் தாமதமாகமே வரும் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
40,000 மெட்ரிக் டொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல், ஜுன் 23 ஆம் திகதி காலை கொழும்பை வந்தடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில காரணங்களால் அந்தக் கப்பல் இலங்கை வருவதில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இன்றும், நாளையும் நாடு முழுவதும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெட்ரோல் விநியோகம் நடைபெறும் என்று அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது போதுமான அளவு டீசல் கையிருப்பில் இருப்பதால் அதன் விநியோகம் வழமைப்போன்று இடம்பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.