January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!

அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட விசேட பிரிவுகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களுக்கு அந்த வாகனங்களின் பதிவு இலக்கங்களின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி வாகனங்களின் இறுதி இலக்கமான 0, 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமை நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன் 3, 4 மற்றும் 5 ஆம் இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் இலக்கங்களுக்கு புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த முறைமை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.