”என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் எவ்வாறு ஆட்சியை பிடிப்பது என்று தெரியாது இருப்பதை எண்ணி நான் கவலையடைகின்றேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
இவர்களிடம் ஆட்சியை கொடுத்தாலும் ஓடி ஒளிகின்றனர் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஓடி ஒளிகின்றனர். இவர்களை நினைத்து கவலையடைய வேண்டியுள்ளது என்று பிரதமர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இருந்தால் எதிர்க்கட்சியினருக்கு தயக்கம் இன்றி சமர்ப்பிக்க முடியும் என்றும், அவை நல்லதாக இருந்தால் மக்கள் அவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைப்பார்கள் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.