இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இம்மாதம் முதல் 6 மாதங்களுக்கு கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்தார்.